குடிநீர் தொட்டி சேதம்

Update: 2025-01-26 19:38 GMT
திருவேங்கடம் தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட குலசேகரப்பேரி ஒத்தக்கடையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து விரிசல் விழுந்த நிலையில் உள்ளன. கான்கிரீட் பூச்சுகளும் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக அச்சத்துடனே செல்கின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு, புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்