மண்ணில் புதைந்த குடிநீர் குழாய்

Update: 2025-01-26 18:11 GMT
பரங்கிப்பேட்டை ஊராட்சி பூவாலை கிராமத்தில் உள்ள குளத்தின் அருகில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குளம் தூர்வாரப்பட்டபோது அங்கிருந்த சேகரிக்கப்பட்ட மண் கரையில் கொட்டப்பட்டது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் பெருமளவு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த குழாய் மூலம் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்