சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வெங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீக்கடியாவயல் கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக தினத்தந்தி நாளிதழில் புகார் வெளியானது. தற்போது அதன் பயனாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், புகாரை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.