கைப்பம்பு சரிசெய்யப்படுமா?

Update: 2025-01-19 14:16 GMT
பரங்கிப்பேட்டை அருகே பூவாலை மேற்கு திரவுபதி அம்மன் கோவில் எதிரில் கைப்பம்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த கைப்பம்பு பழுதடைந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள கைப்பம்பை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்