குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-01-05 11:05 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவமூலா ஆதிவாசி காலனியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஆதிவாசி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்படுமா? என்று அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்