ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான் நகரில் இருந்து அங்காள பரமேஸ்வரி நகர் வரை வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய்களில் விரைவாக குடிநீா் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.