புதர்மண்டி கிடக்கும் கால்வாய்

Update: 2024-12-15 16:19 GMT

திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பொதுப்பணித்துறை காலனியில் உள்ள சாக்கடை கால்வாயில் செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கால்வாய் இருப்பதே தெரியாத அளவுக்கு அப்பகுதியில் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் வழிந்தோடாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் உள்ள புதர்களை விரைவில் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்