அந்தியூர் ஆலாம்பாளையம் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பராமாிப்பின்றி மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.