சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் செல்கின்றது. இதனால் குடிநீர் அதிகளவில் வீணாவதுடன் சாலையில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வீணாகும் குடிநீரை சேமிக்கவும், மீண்டும் இவ்வாறு உடைப்பு ஏற்படாத வகையிலும் குழாயை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.