தேங்கி கிடக்கும் மழைநீர்

Update: 2024-12-01 13:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் நூத்தஞ்சேரியில் உள்ள மாணிக்கம் நகர், ஜாய்நகர், ஜோதி நகர், அபீஸ் ரமணி கார்டன்,பாலாகார்டன், சாய் ராம் நகர் அணைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைநீர் வேளியேறமுடியாமல் காலிவீட்டு மணைகளில் கடந்த 3 மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால்அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்