மழைநீர் வடிகால் தேவை

Update: 2024-12-01 10:03 GMT

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் மண்ணங்காடு கிராமம் வடக்கு செடிகொள்ளையில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்