நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி தெற்கு தெருவில் உள்ள குடிநீர் தொட்டியின் திருகு குழாய் உடைந்துள்ளது. இதனால் தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த திருகு குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.