திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவில் நாராயணபுரம் காப்பால் பகுதி உள்ளது. இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மழைநீரில் நடந்து செல்லும் நிலை உருவாகிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நாராயணபுரம் காப்பால் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.