குடிநீர் வசதி வேண்டும்

Update: 2024-11-24 11:34 GMT

அரியலூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குடிப்பதற்கு போதுமான அளவில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளிலும் சரிவர குடிநீர் வராத காரணத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள் கடைகளில் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுபற்றி கருத்தில் கொண்டு பழைய அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்