சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி குரண்டியில் ஜல்ஜுவன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வராமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.