ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-11-10 08:57 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு பெரியகளக்காட்டூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக இந்த தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந்த குடிநீரை குடிப்பதால் அந்த பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்