அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம் கிராமம் பாஸ்கர் நகருக்கு குப்பம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஸ்கர் நகருக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.