பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-11-03 12:41 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலையில் உள்ள புங்கோடை பகுதி பொது மக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் ஆழ்துளையுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மின்மோட்டார் இன்றி பயனற்று காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்