தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாபுராசபுரம் ஊராட்சி சத்யாகாலனியில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிபில்லாமல் இருக்கிறது. தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. குடிநீரும் மாசடைந்து இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியின் உறுதி தன்மையை ஆய்வு செய்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.