ராமநாதபுரம் நகரில் தலைமை அஞ்சலக கட்டிடத்தை ஒட்டிய புதிய கட்டிட வளாகத்தில் பாஸ்போர்ட் கேந்திரா மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 300 பேர் வருகின்றனர். இவ்விரண்டு அலுவலகங்களிலும் கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பெண்கள், முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?