நாகை மாவட்டம் வேதாரண்யம் அண்ணாபேட்டை ஊராட்சி திருக்குவளை கட்டளையில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக கான்கிரீட் தூண்கள் எழுப்பப்பட்டன. தற்போது இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் தொட்டி அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.