சங்கராபுரம் அருகே சவுந்தரவல்லிபாளையம் குன்றுமேடு பகுதியில் உள்ள மினிகுடிநீர் தொட்டி பழுதடைந்து காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலைய வேண்டிய அவல நிலை இருந்து வருவதால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.