குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-10-20 14:16 GMT

புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் இலுப்பூர் மேலப்பட்டி என்னும் இடத்தில் சாலையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி, சாலையில் தேங்கி வருகிறது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்