கரூர் புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சி, பெரியவரப்பாளையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலை ஓரத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.