திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வெள்ளக்குடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் ரேஷன் கடை வளாகத்தின் முன்பு மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.