பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் பஸ் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கும். மேலும் கிராமப்புறங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கும் செல்கின்றனர். ஆனால் பழைய பஸ் நிலையத்தில் எந்ததொரு இடத்திலும் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கி பருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் வசதிக்காக பஸ் நிலையத்தில் பொதுவான குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.