பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு மாதம் 15 நாட்களுக்கு ஒருமுறை கிணற்று தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனை பொதுமக்கள் வாங்கி சேமித்து வைத்து தங்களது அன்றாட தேவைகளுக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக நகரப்பகுதியில் கிணற்று தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டவில்லை. இதனால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்று தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டு கொள்கிறோம்.