மழைநீர் ஓடை தேவை

Update: 2024-10-06 08:28 GMT

அகஸ்தீஸ்வரம் நகர 11-வது வார்டு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அலங்கார தரைகற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மழைநீழ் வடிகால் ஓடை அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி தெருச்சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், அகஸ்தீஸ்வரம். 

மேலும் செய்திகள்