குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-09-29 17:24 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதே நிலை தொடர்ந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்