குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-22 13:53 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வாலி கண்டாபுரம் ஊராட்சி 9-வது வார்டு வாரச்சந்தை பிள்ளையார் கோவில் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து தொட்டியில் குடிநீர் நிரப்பி அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்டி சரியாக பராமரிக்காமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் தொட்டியில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது காட்சி பொருளமாக தொட்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்