சங்கராபுரம் அருகே கீழப்பட்டு ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மினிகுடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் மினிகுடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின் மோட்டாரை உடனே சீரமைத்து காட்சி பொருளாக இருக்கும் மினிகுடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.