தூர்வார வேண்டும்

Update: 2024-09-01 09:10 GMT

மெதுகும்மல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குழிஞ்ஞான்விளையில் பெரும்குளமும், அதன் கரையில் ஒரு குடிநீர் கிணறும் உள்ளது. அந்த பகுதி மக்கள் தங்கள் தேவைக்கு இந்த கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து வந்தனர். தற்போது பல ஆண்டுகளாக அந்த கிணற்றை முறையாக தூர்வாரி பராமரிக்கவில்ைல. இதனால், கிணற்றில் கழிவுகள் தேங்கி தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக கிணற்று தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.


மேலும் செய்திகள்