திருச்சி மாவட்டம், வண்ணாரப்பேட்டை திரு.வி.க.நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாலை ஓரத்தில் அடிப்பம்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த அடிப்பம்பானது பராமரிப்பு இன்று கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்று உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த அடிப்பம்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.