கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புங்கோடை பகுதியில் புகழூர் வாய்க்கால் அருகே விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதன் அருகில் நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டு அதில் குடிநீர் ஏற்றப்பட்டுவந்தது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், மின்மோட்டார் பழுது காரணமாக தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.