திருச்செந்தூர் அருகே காயாமொழி பஞ்சாயத்து வள்ளுவர் நகரில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா முடிந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.