நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி கீழவெளி காந்திநகர் கிராமத்தில் வெட்டியான் குளம் உள்ளது. இந்த குளம் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கிறது. குளத்தின் கரைகளும் சேதமடைந்து இருக்கின்றன. இதன்காரணமாக குளத்தில் நீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?