பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-08-18 12:56 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி கரடிகுளம் 20-வது வார்டு இருளர் குடியிருப்பு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியின் கீழ் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி தற்போது வரை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்