ஈத்தங்காடு-மணக்குடி நெடுஞ்சாலையில் வடக்கு தாமரைகுளம் ரெயில்வே கிராசிங் பகுதியில் ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்ந்து வருகிறது. இதனால், சந்தையடி மற்றும் கவர்குளம், தேரிவிளை போன்ற கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குழாய் உடைப்பை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.