வாணாபுரம் பழைய காலனியில் உள்ள மினிகுடிநீர் தொட்டி சேதமடைந்து, அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்மோட்டாரை இயக்கி மினிகுடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதால் அரசுக்கு வீண் செலவு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சேதமடைந்த மினிகுடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.