ஓமலூர்-மேச்சேரி பிரிவு சாலையின் அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே பிரதான சாலையையொட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறும் முன் ஆபத்தான மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.