குடிநீர் வீணாகிறது

Update: 2024-07-28 17:58 GMT

வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கண்டர்குலமாணிக்கம் பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அலவாய்பட்டி பஞ்சாயத்து கசாலகுட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. சேதமடைந்த குழாயை சரிசெய்யாததால் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் வினியோகம் நின்றதும், சாலையில் தேங்கிய தண்ணீர் மீண்டும் குழாயில் செல்வதால், மாசு கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்