சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள காந்திபுரத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. அதன் வளாகத்தில் கிணறு ஒன்று தூர்ந்து போய் உள்ளது. இந்த கிணற்றில் இப்பகுதியில் உள்ள சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கிணறு தற்போது குப்பை கிடங்காக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பு கிணற்றை தூர்வாரி பொதுமக்களுக்கும், கால்நடை ஆஸ்பத்திரிக்கும் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-ஜெயபால், சேந்தமங்கலம்.