கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே லேசாக மழை பெய்தாலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் தண்ணீர் வெளியே செல்வதற்கும் போதுமான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் விஷபூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் மழை நீர் தேங்காத வண்ணம் கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.