குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2024-07-28 12:44 GMT

 குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் கருமாரம்பாளையம் அருகே சாலையின் நடுவே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் இரவு நேரத்தில் பள்ளத்தை கவனிக்காமல் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. முன்னே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தை பார்த்து திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனம் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுவதற்குள் குழாய் உடைப்பை சீரமைத்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தசாமி, கருமாரம்பாளையம்.

99897 67523

மேலும் செய்திகள்