குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-07-28 09:56 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா 54 நெம்மேலி கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது குளம் தண்ணீரின்றி வறண்டு செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் குளத்தின் கரைகளும் சேதமடைந்து இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்