சேலம் காடையாம்பட்டி தாலுகாவுக்குட்பட்ட குண்டுக்கல் கிராமத்தில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த பகுதிக்கு முறையான குடிநீர் வசதியில்லாததால் பெண்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. மேலும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த குழாய்களை சரி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.