தண்ணீர் வசதி வேண்டும்

Update: 2024-07-21 11:32 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கொலையனூரில் உள்ள சுடுகாட்டில் தண்ணீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக அங்கிருந்த தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வசதி இல்லாமல் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்