கடையம் மெயின் பஜாரில் புதிதாக தார் சாலை போடப்பட்ட நிலையில், சாலையில் பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை சேதமடைவதுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.