விழுப்புரம் 17-வது வார்டில் உள்ள மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் வெகுதூரம் அலைந்து திரிய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மினிகுடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?