கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரத்தில் மினிகுடிநீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் சுவிட்ச் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, மின்மோட்டார் சுவிட்சை சீரமைத்து அப்பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.